சென்னை: மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், ‘யசஸ்வி’ எனும் இளையசாதனையாளருக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான தகுதித் தேர்வு வரும் 25-ம் தேதிகணினிவழியில் நடக்க உள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 5-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் https://yet.nta.ac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
16 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago