சென்னை: சென்னை ஐஐடியில் சேரவிரும்புவோரை இலக்காக கொண்டு, ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 'AskIITM' என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளனர். இதன்மூலம் சென்னை ஐஐடி தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலம் பதில் அளிக்கப்படும்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகதின் முன்னாள் மாணவர்கள் AskIITM.com என்ற இணையதளத்தைத் தொடங்கி உள்ளனர். ஐஐடியில் சேரவிரும்புவோர் நேரடியாக அணுகும் வகையில், வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடங்கி வளாக வசதிகள் வரை சென்னை ஐஐடி தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு உரிய பதில்களைப் பெறலாம்.
வெள்ளிக்கிழமை (ஆக.26) தொடங்கப்பட்டுள்ள இந்த இணைதளத்தினை பயன்படுத்த www.askiitm.com என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், "விருப்பமுடைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடுகிறார்கள். ஆனால் அங்கு கிடைக்கும் தகவல்களோ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
» நாடு முழுவதும் 21 போலி கல்வி நிலையங்கள்: பட்டியலை வெளியிட்ட யுஜிசி
» தமிழகத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
சிறந்த இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITM மூலம் ஆர்வமுடன் பதில் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்விக்கும் இது ஒரு தொடக்கப் பயணமாக அமையும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சி குறித்து முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், "எங்கள் முன்னாள் மாணவர்கள்தான் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சிறந்தவர்கள். ஏனெனில் இக்கல்வி நிறுவனத்தில் படித்து, பட்டப் படிப்பு முடித்த பின்பு வேலைவாய்ப்பையும் நேரடியாகப் பெற்றவர்கள் அவர்கள்" என்றார்.
AskIITM-ஐ பின்னணியில் இருந்து வழிநடத்தும் குழுவிற்கு தலைமை தாங்கும் அம்ருதாஷ் மிஸ்ரா கூறும்போது, "தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் எளிதில் அணுகும் வகையில் இணையதளம் வடிமைக்கப்பட்டு உள்ளது. ஐஐடியில் நேரடியாக அனுபவம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில், இதில் நுழைய விரும்புவோருக்கு நம்பகமான பதில்களை AskIITM மூலம் அளிக்க முடியும் என நம்புகிறோம்"என்றார்
ஐஐடி தொடர்பான கேள்விகளை இந்த இணையதளத்தில் யாரும் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அந்தக் கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்பவர்களுக்கான பதில் இமெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ அனுப்பப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அக்கேள்விகள் இடம்பெறும்.
AskIITM-யின் ஒரு முயற்சியாக, சென்னை, ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் செப். 2 - 4 ஆம் தேதி வரை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஜேஇஇதேர்வு எழுதுவோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இயக்குநர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பலாம்.
செப். 10, 11 ஆகிய தேதிகளில், கல்விநிறுவன வளாகம், பல்வேறு துறைகளை மெய்நிகர் முறையில் காணமுடியும். வரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். https://www.askiitm.com/events
முக்கிய செய்திகள்
கல்வி
12 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago