புதுடெல்லி: புதிய இந்தியாவுக்கான பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொது மக்களுக்கு மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், "தேசிய கல்விக் கொள்கை- 2020-க்கு ஏற்ப உருவாக்கப்படும் ஆற்றல்மிக்க தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
வலிமையான, ஆற்றல்மிக்க, அனைத்தையும் உள்ளடக்கிய, எதிர்கால முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவது, கலாசார ஆணிவேருடன் ஒருங்கிணைக்கவும், உலகளாவிய கண்ணோட்டம், காலனி ஆதிக்க முறையிலிருந்து கல்வித் துறையை விடுவித்து, நமது அடுத்த தலைமுறையினரிடையே ஆழ்ந்த பெருமிதத்தை ஏற்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
யார் பங்கேற்கலாம்? - ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், சமுதாய உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் உள்பட பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வமுள்ள யாரும், இந்த கருத்துக் கேட்பில் பங்கேற்கலாம். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என்று மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago