சென்னை: தேசிய தேர்வு முகமை நடத்திய ஜேஇஇ மெயின் தேர்வில், தேசிய அளவில் முதல்100 இடங்களில் 34 இடங்களை பிடித்துஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் மீண்டும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.
இதுகுறித்து ஆலன் கரீர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் பிரஜேஷ் மகேஷ்வரி கூறியிருப்பதாவது:
ஜேஇஇ மெயின் தேர்வில் ஆலன் மாணவி ஸ்நேஹா பரீக் தேசிய அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார். இவர் 100 சதவீத மதிப்பெண் பெற்று, இந்திய அளவிலான பெண்களில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்வில் மொத்தம் 24 மாணவ, மாணவிகள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
» மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி
இவர்களில் 7 பேர் ஆலன் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்நேஹா பரீக், ஷ்ரீனிக்மோகன், அருண்தீப் குமார், நவ்யா, கனிஷ்க் ஷர்மா, குஷாக்ரா ஸ்ரீவஸ்தவா, கிருஷ்ணா ஷர்மா ஆகியோர் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.
மேலும் முதல் 100 இடங்களில் 34 இடங்களை ஆலன் மாணவர்கள் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி 13 பேர் பல்வேறு மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ளனர். ஸ்நேஹா பரீக் அசாம் மாநிலத்திலும், ஷ்ரீனிக் மோகன்-மகாராஷ்டிரா, அருண்தீப் குமார்-பிஹார், நவ்யா மற்றும் கிருஷ்ணா ஷர்மா-ராஜஸ்தான், கனிஷ்க்ஷர்மா-உத்தர பிரதேசம், குஷாக்ரா ஸ்ரீவஸ்தவா-ஜார்க்கண்ட், மோஹித் காதிவாலா-குஜராத், ஷர்த் ஷிங்லா-சண்டீகர், அபினவ் ராஜேஷ் ஸ்ரீபத்-சத்தீஸ்கர், திவ்யான்ஷு மாலு-ஒடிசா, எஸ்.பி.சித்தார்த்-புதுச்சேரி, ரியான் குப்தா-ஹிமாச்சல பிரதேசம் டாப்பர்களாக வந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
16 hours ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago