சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க செப். 9-ம் தேதி கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க செப்டம்பர் 9-ம் தேதி கடைசிநாள் என சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறுபான்மையினர் நல இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு (1-ம் வகுப்பு முதல்), பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நேரடியாக வங்கிக்கு

இந்த உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகசெலுத்தப்படுகிறது. இந்நிலையில், 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் மாதம் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளமாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரையும், சிறுபான்மையினர் நல இயக்ககத்தில் உள்ள மாநில ஒருங்கிணைப்பு அலுவலரையும் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

14 hours ago

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

மேலும்