சென்னை: சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் சட்டக் கல்வி (ஸ்கூல்ஆஃப் லா) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று (ஜூலை 30) மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், சட்டக்கல்வி பொது நுழைவுத் தேர்வு (கிளாட்) புள்ளிகள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் நேற்று இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதில் சென்னை அடையாறு ஸ்ரீசங்கரா சீனியர் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.நவீன் பாலாஜி அண்ணாமலை முதலிடம் பிடித்துள்ளார். இவர் பிளஸ் 2 தேர்வில் 96.20%, கிளாட் தேர்வில் 83.25 புள்ளிகள் பெற்றுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் ஹரிஸ்ரீ வித்யா நிதி பள்ளி மாணவி எச்.ஆர்.ரித்திகா 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் பிளஸ் 2 தேர்வில் 97.80%, கிளாட் தேர்வில் 75.25 புள்ளிகள் பெற்றுள்ளார். கோவை வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி மாணவி பி.ஸ்ரேயா 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர் பிளஸ் 2 தேர்வில் 95.80%, கிளாட் தேர்வில் 71.50 புள்ளிகள் பெற்றுள்ளார்.
சட்டக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் வெளிப்படையான முறையில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வு, காலி இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜூலை 31-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 29-ம் தேதி வரை நடைபெறும். சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தாமல், கிளாட் தேர்வு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சட்டக் கல்வி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
14 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago