சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2022-2023 கல்வியாண்டுக்கான படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில், 2022-2023-ம் கல்வி ஆண்டில் பின்வரும் பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை 22.07.2022க்குள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.07.2022க்குள் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பபட்டுள்ளது.
> இளங்கலை – காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)
> இளங்கலை – காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)
> இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)
> இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
> இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)
> இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts (Animation and Visual Effects)
தற்போது, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்பெற்ற நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் 05.08.2022 வரையிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 12.08.2022 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்திடலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விபரங்களை தகவல் தொகுப்பேட்டினை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்படும் கால அவகாசத்தினை கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
கல்வி
14 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago