நீட் தேர்வு: மாணவர்களின் மனநலனை கவனத்தில் கொள்ளுமா தேசியத் தேர்வு முகமை?

By செய்திப்பிரிவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வானது பாடத்திட்டம், கேள்விகள் என எல்லாவற்றையும் தாண்டி, வேறொரு விவாதத்தை இம்முறை எழுப்பியிருக்கிறது.

கேரளத்தின் கொல்லத்தில் ஒரு தேர்வு மையத்தில் மாணவி ஒருவரைச் சோதித்தபோது, அவரது உள்ளாடையில் கொக்கி இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக உள்ளாடையைக் கழற்ற வேண்டும் என்று அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

தேர்வுக்கான விதிமுறைகளில் உள்ளாடைகள் குறித்து எவ்விதக் குறிப்புகளும் இல்லை என்பதால், தனது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மாணவியின் தந்தை. அம்மாநிலத்தின் மனித உரிமை ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளன.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டபோது, மாணவிகள் காதணிகளையும், கழுத்தணிகளையும் அணிந்துவர அனுமதிக்கப்படவில்லை. அணிந்துசென்றவர்களும் அவற்றைக் கழற்றிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால், இந்த முறை நடந்திருப்பது மாணவர்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் படுமோசமான உளவியல் தாக்குதலாகக் கருதப்படுகிறது. தேர்வெழுதும் ஒரு மாணவர் தன்னை மிகவும் இயல்பாக உணர வேண்டும் என்பதும் பதற்றத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதும் எந்தவொரு தேர்வுக்கும் பாலபாடம்.

உள்ளாடை அணிவதைத் தனக்கு வசதியாக உணரும் ஒரு மாணவரிடம் அவற்றை அகற்றுமாறு கோருவது அதுவும் சங்கடத்துக்கு உள்ளாக்கும்வகையில் அறிமுகமில்லாத அறைகளில் அகற்றச்சொல்வது என்பது தேர்வெழுதும் அவரது மனநிலையை முற்றிலுமாகச் சிதைத்து அழிக்கக் கூடிய வாய்ப்புகள் கொண்டது.

இது போன்ற நிகழ்வுகள் ஏதோ நீட் தேர்வில் மட்டும் நடக்கவில்லை. தேசியத் தேர்வு முகமை நடத்தும் மற்ற தேர்வுகளிலும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அது தேர்வு மைய அதிகாரிகளின் மனோநிலைக்கேற்ப மாறுபடுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் காட்டிலும் தேசியத் தேர்வு முகமை மாணவர்களிடத்தில் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன? தேசியத் தேர்வு முகமை, மாணவர்களின் மனநலத்தையும் கணக்கில் கொண்டு தேர்வு மையங்களுக்குத் தெளிவான வழிகாட்டு முறைகளை வழங்குவதால் மட்டுமே இம்மாதிரியான சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

12 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்