அம்பத்தூர் ஐடிஐயில் ஜூலை 20 வரை நேரடி சேர்க்கை

By செய்திப்பிரிவு

சென்னை: அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), பல்வேறு தொழில் பிரிவுகளில் பயிற்சி வகுப்புக்கு நேரடி சேர்க்கை ஜூலை 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை அம்பத்தூர் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் 20-ம் தேதி வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in)
வாயிலாக நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்புஇல்லை.
கம்மியர் கருவிகள், கட்டிடப்பட வரைவாளர் ஆகிய 2 பயிற்சிகளுக்கு (தலா 2 ஆண்டு), கோபா, செயலகப்பயிற்சி ஆகிய 2 பயிற்சிகளுக்கு (தலா ஒரு ஆண்டு) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தையல் தொழில்நுட்பம் (ஓர் வருடம்) பயிற்சிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750-ம், இலவச பேருந்து பாஸ், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடுகாலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை போன்றவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு கல்விச் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்