‘இந்து தமிழ் திசை’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் பள்ளி மாணவர்களுக்காக வெளிவரும் ‘வெற்றிக்கொடி’யில் மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை ‘வெற்றிக் கொடி’ நடத்துகிறது.

இப்போட்டியில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ‘உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகையின் பங்கு’ எனும் தலைப்பில் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுதி, மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி அடையாள அட்டை எண் ஆகியவற்றுடன் chnVK_contest@hindutamil.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 15) அனுப்ப வேண்டும். சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்யப்படும் 3 வெற்றியாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் பரிசு காத்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களின் விவரம், அடுத்த வார போட்டிக் கேள்வியுடன் வெளியாகும்.

போட்டி எண் - 1, வாரம் 1-ல் பரிசு பெறும் பள்ளிகள்: 1.அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, மல்லல், சிவகங்கை மாவட்டம்,2. அரசு நடுநிலைப்பள்ளி, மணப்பேட்டை, புதுச்சேரி, 3. சென்னை உயர்நிலைப் பள்ளி, இருசப்பா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE