10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. 12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் என மொத்தம் 17.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. 12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்கள் மற்றும் தாங்கள் படித்த பள்ளிகளிலும் இலவசமாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். இதுதவிர, மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தலைமை ஆசிரியர்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது விட்டதால், அந்த தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

மேலும்