பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தேர்வு விடுமுறை முடிந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று (ஜூன் 20) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2021-22) பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10 முதல் மே 31-ம் தேதி வரை நடைபெற்றது.

அதன்பின் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்கியது. இதற்கிடையே 1 முதல் 10-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று (ஜூன் 20) முதல் தொடங்கவுள்ளன. இதற்கேற்ப அனைத்துவித முன்னேற்பாடுகளும் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து புதிய கல்வி ஆண்டில் பிளஸ் 1 சேரும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

22 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்