‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி - ஜூன் 19-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி ஜூன் 19-ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்கள் அதிகம்.

அத்தகைய தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வரும் ஞாயிறு (ஜூன் 19) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மதுரை தெற்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், ஐபிஎஸ்., 2021 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 195-வது இடத்தில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற டாக்டர் சி.மதன், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் http://www.htamil.org/00673 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.

‘ஆளப் பிறந்தோம்’ நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ’இந்து தமிழ் திசை’ வெளியீடான இயர்புக் 2021 (ரூ.250), இயர்புக் 2022 (ரூ.275) ஆகிய இரண்டு புத்தகங்களும் 20 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

23 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்