முதல் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு, மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தைப் போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன்பிறகு வழக்கம்போல வகுப்புகள் நடைபெறும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வு எழுத முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

15 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்