சென்னை: வெற்றி ஐஏஎஸ் அகாடமியின் சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, நெல்லை, கோவில்பட்டி கிளைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளைமுதல் (ஜூன் 5) தொடங்குகிறது.
இதுகுறித்து வெற்றி ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் மு.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2ஏ மெயின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளைமுதல் (ஜூன் 5) நடைபெறவுள்ளன. இப்பயிற்சியை ஒட்டி இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் விடைத்தாள்கள் தனி அறையில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதன்மூலம் மாணவர்களுக்கு இத்தேர்வு குறித்த தெளிவு ஏற்படும்.
மேலும், தமிழ், ஆங்கிலத்தில் தனித்தனி வகுப்புகள் நடைபெறும். 30 தேர்வுகள் கொண்ட தேர்வுத் தொடரும் தொடங்கப்பட உள்ளது. தேர்வுகளை எழுதும் முன் மாணவர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதைத் திருத்தி, தேர்வு எழுத வேண்டிய முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். வார நாட்கள், வார இறுதி நாட்களின் நடைபெறும் பயிற்சிக்கு தனித்தனியாக முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் வழியாகவும் இத்தேர்வை எழுதலாம்.
சென்னையில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும். இதில் சேர விரும்பும் மாணவர்கள் 9884421666, 9884432666 எண்களில் தொடர்பு கொண்டுமுன்பதிவு செய்யலாம். அல்லது பெயர், செல்போன் எண்ணுடன் Group 2 Mains Exam என டைப் செய்து 9884421666 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்-அப் அனுப்பலாம். l
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago