தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம்வகுப்பு வரை கட்டணம் செலுத்தத்தேவையில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 8,239 தனியார் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் வரை உள்ளன.

இந்நிலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. ஏறக்குறைய 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதில்சேர்க்கை பெற தகுதியானவர்களின் பட்டியல் மே 28-ம் தேதி பள்ளிகள் மூலம் வெளியிடப்படும்.

ஏதேனும் பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ம் தேதிவெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்றஇணையதளம் வழியாக பெற்றோர் அறிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த சேர்க்கை பணிகளையும் முடித்து, ஜூன் 4-ம்தேதிக்குள் அதற்கான அறிக்கையை தனியார் பள்ளிகள் அந்தந்த மாவட்டக்கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்