‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, வரும் ஞாயிறு (மே 29) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்காகும் செலவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தரும் நோக்கில் ‘ஆளப்பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள விவேகானந்தா அரங்கில், வரும் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட சிறப்புப் பணி அதிகாரி க.இளம்பகவத், ஐபிஎஸ்., மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.htamil.org/00605 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

‘ஆளப்பிறந்தோம்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான, ரூ.275 மதிப்புள்ள இயர்புக் - 2022 புத்தகம் சிறப்புச் சலுகை விலையில் ரூ.200-க்கு கிடைக்கும். ரூ.525 மதிப்புள்ள இயர்புக் 2021 மற்றும் இயர்புக் 2022 புத்தகங்கள் காம்போ சலுகை விலையாக ரூ.375-க்கு கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

11 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்