போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் சோ.மதுமதி, அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் (மே 6) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான பள்ளி, கல்லூரி மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆனால், ஏராளமான மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் தவறுதலாக இருப்பதால் உதவித்தொகை சென்றடையவில்லை. அந்த மாணவர்களின் விவரம் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அந்தந்த மாணவரின் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகத்தில் உள்ளவாறு சரியான விவரங்களை மே 10-ம் தேதிக்குள் பள்ளி, கல்லூரிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுசார்ந்த உரிய அறிவுறுத்தல்களை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
6 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago