சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்.25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்குமுன்னதாக செய்முறைத் தேர்வுகளை ஏப்.25-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். செய்முறைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை ஏப்.28-ம் தேதிக்குள்தேர்வுத் துறை (www.dge.tn.gov.in) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடத்துவதற்குத் தேவையான நிதியை பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அதிகாரியிடம் பெற்றுக்கொள்ளலாம். இயற்பியல் தேர்வுக்கு மட்டும் கால்குலேட்டர் எடுத்துவர மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கலாம்.
மே 4-க்குள் மதிப்பெண் பட்டியல்
தேர்வுகள் முடிந்தபின், அதற்கான மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே 4-ம்தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள்சமர்ப்பிக்க வேண்டும். அந்த மதிப்பெண் விவரங்களை முதன்மைக்கல்வி அதிகாரிகள் இணையதளத்தில் மே 10-க்குள் பதிவேற்றம் செய்வதுடன், அதன் விவர அறிக்கையையும் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago