ஏப்.9-ல் சிமேட் நுழைவுத் தேர்வு: என்டிஏ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய உயர்கல்வி நிறுவனங்கள். ஏஐசிடிஇ-ன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகிறது.

நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான அவகாசம் மார்ச்17-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தேர்வு தேதி விவரங்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் சிமேட் தேர்வு ஏப்.9-ம் தேதி மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ள பட்டதாரிகள் cmat.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (http://www.nta.ac.in/) அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 69227700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

மேலும்