உலக ஒளிப்பட நாள் - ஆகஸ்ட் 19
ஒரு திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே, அது தொடர்பாக நமக்கு முதலில் பார்க்கக் கிடைப்பது ஒளிப்படம்தான். அந்த ‘ஃபர்ஸ்ட் லுக்’ அசத்தலாக வர மிகவும் மெனக்கெடுபவர் ஒளிப்படக் கலைஞர்தான். அந்தவகையில் தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்களைத் தனித்துவமாக போட்டோ ஷுட் எடுத்துப் பிரபலமானவர் ஒளிப்படக் கலைஞர் வெங்கட்ராம். சினிமா மட்டுமன்றி உணவகங்கள், தொழில்துறை என ஒளிப்படக் கலையில் முத்திரை பதித்துவருபவரிடம் தற்போதைய ஒளிப்படத் துறை எப்படியிருக்கிறது எனப் பேசியதிலிருந்து...
தற்போது ஒளிப்படத் துறையில் வேலைவாய்ப்பு எப்படியிருக்கிறது?
எவ்வளவு சம்பாதிக்க முடியும் எனக் கணக்குப்போட்டு ஒரு தொழிலில் இறங்குவது மிகவும் தவறு. பணத்துக்காக ஒரு தொழிலைச் செய்தால் நீண்ட நாள் நீடிக்காது. அதிலும் ஒளிப்படத் துறை அற்புதமான கலைத்துறை. வியாபாரத்துக்காகச் செய்தாலும் அதில் கலை வடிவம் இருக்கிறது. ஒரு பொருளைத் தயாரித்து விற்பது வேறு, ஒளிப்படம், ஓவியம், எழுத்து என்பதெல்லாம் வேறு. இந்த மாதிரியான துறைகளுக்குப் பணம் பிரதானமாக இருக்கக் கூடாது. பேரார்வம்தான் முக்கியம். பேரார்வத்தை மட்டுமே வைத்துத் தொழிலைத் தேர்வு செய்யுங்கள், தானாகப் பணம் உங்களைத் தேடி வந்து குவியும்.
நீங்கள் எப்படி இந்தத் துறையைத் தேர்வு செய்தீர்கள்?
ஒளிப்படத் துறை பிடித்திருந்ததால் பொறியியல் பட்டப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வந்தேன். 25 வருடங்களுக்கு முன்பு நான் செய்தது முட்டாள்தனம். அப்போது பொறியாளர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்பு இருந்தது.
ஆனால், ஒளிப்படத் துறை என்றாலே கல்யாணத்துக்குப் படம் எடுப்பது அல்லது தொழிற்சாலைகளில் உள்ள கருவிகள், உபகரணங்களைப் படம் பிடிப்பது என்பதாகத்தான் இருந்தது.
அப்போது ஃபேஷன் துறை, திரைப்படத் துறை, அதிலும் நடிகர் - நடிகைகளுக்கு எனப் பிரத்யேக ஒளிப்படக்காரர்கள் என்றெல்லாம் கிடையாது. திடீரெனப் புதிதாகத் தொடங்கி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது.
ஒளிப்படத் துறையில் தொழில், உணவு, திரையுலகம் என நிறைய இருக்கிறது. எதில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
வாய்ப்புகள் அனைத்திலுமே இருக்கின்றன. பலரும் கல்யாண ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடத் தற்போது உணவகங்கள் அதிகமாகிவிட்டன. அதனால் உணவுப் படங்கள் எடுப்பதற்கு இப்போது தேவையிருக்கிறது. தேயிலை, ஜவுளி போன்ற உற்பத்தித் துறையிலும் ஒளிப்படக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இது பலருக்குத் தெரிவதில்லை.
கமர்ஷியலாகப் பார்த்தால் கல்யாணத்துக்கு அதிகம் செலவுசெய்வார்கள். அதனால் அங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அத்துறையில் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவருகிறார்கள். திருமணத்துக்குப் முன்பு, திருமணத்துக்கு பின்பு, தேனிலவு ஒளிப்படங்கள், யதார்த்தமாகப் படம் எடுக்கும் முறை இப்படி நிறைய ஒளிப்பட முறைகள் வந்துவிட்டன.
இன்று அனைவரது கையிலும் அலைபேசி வழியே கேமரா வந்துவிட்டதே...
பொதுவாக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால், அந்தத் துறையைச் சேர்ந்தவரைத்தான் அழைக்கிறோம். ஆனால், இன்றைக்கு அனைவருமே செய்யலாம் என்கிற தொழிலாக ஒளிப்படக் கலை ஆகிவிட்டது. குழந்தைகள்கூட ஒளிப்படம் எடுக்குமளவுக்கு தற்போது தொழில்நுட்பம் எளிதாகிவிட்டது.
முன்பெல்லாம் கேமரா எடுக்க வேண்டுமானால் கைநடுக்கம் ஏற்படும். Aperture, Shutter Speed தெரியாமல் ஒளிப்படம் எடுப்பது கடினம். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது ஒளிப்பட நிபுணராக மகிழ்ச்சி அடைகிறேன்.
Venkatram Photography 3rightஒளிப்படத் துறை சார்ந்த படிப்புகள் நிறைய வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா...
நம்முடைய கல்லூரிகளில் விஸ்காம் படிப்பில் ஒளிப்படம் என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் ஒளிப்படத்தைக் கற்பிக்கப் பிரத்யேகமாக 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு உட்படப் பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் படிப்பதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் நிறைய செலவாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை ஊட்டியில் Light & life academy, சென்னையில் Ambitions என நிறைய தொடங்கியுள்ளார்கள். அதேபோல ஒளிப்படக் கலைஞர்களும் தனியாகப் பயிற்றுவித்து வருகிறார்கள். ஆனால், யார் நன்றாகக் கற்றுக் கொடுப்பார்கள் எனத் தெரிந்திருக்க வேண்டும்.
வெறும் படிப்பு மட்டுமன்றித் தொழில்முறையில் விளக்குகள் எல்லாம் வைத்துக் கற்றுக்கொடுப்பவர்களை அடையாளம் காண வேண்டும். தற்போது கற்றுக்கொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன.
நேரடியாகப் படிக்காமல் இணையதளங்கள் வழியாகக் கற்றுக்கொள்ள முடியாது என்கிறீர்களா?
4, 5 ஒளிப்படங்களைப் பார்த்து அதிலிருந்து ஒரு விஷயத்தை எடுத்துப் புதிதாக நாமொரு ஒளிப்படம் எடுக்கலாம். Instagram, Pinterest உள்ளிட்ட இணையதளங்களில் வரும் ஒளிப்படங்களைப் பார்த்தாலே நமக்கு வெவ்வேறு வகையான ஒளிப்படங்கள் எடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். இணையத்தில் நிறைய டுடோரியல் இருக்கிறது. லைட், கேமரா, லென்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகளை அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இணையம் மூலமாக அதிகப்படியான விஷயங்கள் கிடைக்கின்றன என்பதுதான் உண்மை. அதன்மூலம் குழப்பம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
உங்களிடம் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?
நான் யாரிடமும் திறமையை எதிர்பார்ப்பதில்லை. உதவியாளராகச் சேர்ந்து பணிபுரியும்போது ஆர்வம்தான் முக்கியம். தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தொழில் மீதான கவனம் எப்போதுமே இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே வாழ்க்கை முழுவதும் புதுமையாகப் பணிபுரிய முடியும்.
என்னிடம் பணிபுரியும்போது கடின உழைப்புதான் மிகவும் முக்கியம். விளம்பரத் துறையில் ஒரு ஒளிப்படம் எடுத்து உடனே வேண்டும் என்பார்கள். எதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உணவு, படம், தொழில்துறை என எதைப் பற்றிய ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்றாலும், அதைச் சுற்றியிருக்கும் விஷயங்களை நாமே ஒருங்கிணைத்து ஒளிப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
நீங்கள் எடுக்க நினைக்கும் ஒளிப்படத்தைக் கொண்டுவருவதற்கு என்ன தேவை என்பதை உதவியாளராகப் பணிபுரியும்போது தெரிந்துகொள்ளலாம். தற்போது ஒளிப்படம் எடுப்பது எளிதாகிவிட்டதால், பலருக்கு அதனுடைய அருமை தெரிவதில்லை என்பதே உண்மை.
இன்று அனைவருமே ஒளிப்படம் எடுக்கலாம் என்ற சூழல் வந்துவிட்டதால் சம்பளம் குறைந்துள்ளதா?
நமக்கென்று ஒரு பிராண்டை உருவாக்குவது மட்டுமே இதில் முக்கியமான விஷயம். கல்யாண ஒளிப்படம் என்பது ரூ.50 லட்சத்துக்கும் எடுக்கலாம், ரூ.5 ஆயிரத்துக்கும் எடுக்கலாம். ஆனால், அவ்வளவு பணம் ஏன் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் எடுக்கும் படம் மற்றவர்களை எவ்வளவு கவர்கிறதோ, அந்த அளவுக்குச் சம்பளமும் கிடைக்கும்.
மற்றவருக்கு மட்டும் அவ்வளவு, நமக்கு இவ்வளவுதானா என்று ஒப்பிடுவது தவறு. ஏன் கொடுக்கிறார்கள் என்று முதலில் யோசிக்க வேண்டும். ஒரு ஒளிப்படம் எடுக்கும்போது காதலித்து எடுத்து, அது நாம் நினைத்ததைவிட அருமையாக இருக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் பணத்தைவிடப் பெரிது.
முக்கியப் பத்திரிகைகள்
Better Photography
Photoshop Creative Collection
Digital Photography
Aperture
GUP (Guide to Unique
Photography) Magazine
Organica Magazine
ஒளிப்படம் கற்க
லைட் அண்ட் லைஃப் அகாடமி, ஊட்டி
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன், அகமதாபாத்
சார் ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ளைட் ஆர்ட்ஸ், மும்பை
முக்கிய செய்திகள்
கல்வி
11 hours ago
கல்வி
11 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
16 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago