புதியவர்களின் அறிமுகமும் ஏகப்பட்ட தகவல்களும் கிடைத்தும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை அரட்டை அடிப்பதற்காகவே பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காண நாம் ஏன் ஒரு புதிய சமூக ஊடகத்தை வடிவமைக்கக் கூடாது என்று யோசித்தபோதுதான் ‘லெட்ஸ்கனெக்ட்’ திட்டம் உதித்தது” என்கிறார் பிரவீன் கணேஷ்.
படித்து முடித்த பிறகு வேலை தேடிப் போவதற்குப் பதிலாகப் படிக்கும்போதே வேலை மாணவர்களைத் தேடிவர வழிவகை செய்திருக்கிறார் இவர்.
ஒரு வருடமாகச் செயல்பட்டுவரும் ‘லெட்ஸ்கனெக்ட்’ நிறுவனத்தோடு அனைத்திந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டு நாடு முழுவதிலும் உள்ள 10,000 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள 160 கலை-அறிவியல், மருத்துவக் கல்லூரிகளில் இது செயல்பாட்டில் உள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு லண்டனில் எம்.பி.ஏ. படித்தவர் பிரவீன் கணேஷ். பிரிட்டிஷ் ஏர்வேஸில் ‘நியூக்ளியர் சயின்டிஸ்ட்’ ஆகச் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். சென்னை போயஸ் தோட்டத்தில் 62 ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமாக ‘லெட்ஸ் கனெக்ட்’-யை நிறுவி அதன் தலை மைச் செயலதிகாரியாக உள்ளார்.
மேம்பாடும் பயிற்றுவிப்பும்
பணிவாழ்க்கைக்கு உரிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ‘லிங்க்டுஇன்’ போன்ற இணைய நிறுவனங்கள் ஏற்கெனவே பரவலாகி இருக்கும்போது இவருடைய இணையதளத்துக்கான அவசியம் என்ன என்று கேட்டால், “ஒரு மாணவர் படித்து முடித்த பிறகுதான் ‘லிங்க்டுஇன்’ போன்ற தளங்களின் மூலம் வேலைக்கான தொடர்புகள் கிடைக்கும்.
‘லெட்ஸ்கனெக்ட்’ என்பதன் மூலம் கல்லூரியில் ‘இண்ட்ராநெட்’ (Intranet) வசதியைப் பொருத்துகிறோம். இதன் மூலம் கல்லூரிக்குள் நடைபெறும் அத்தனை நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கிறோம். அதேநேரத்தில் இது வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான தளம் அல்ல. இதில் பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மைகளை ஆராய்ந்து அவருடைய திறனை அறியவும் கைகொடுக்கிறது.
உதாரணத்துக்கு, நான் (பிரவீன் கணேஷ்) இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறேன் என்றால், சக மாணவர்கள், பேராசிரியர்களுடனான என்னுடைய உரையாடல்களைக் கூர்ந்து கவனித்து நான் மேற்கொண்டு என்ன படிக்கலாம், எத்தகைய பணி என்னுடைய விருப்பத்துக்கும் திறனுக்கும் பொருத்தமானது என்பதை இந்தத் தளம் சொல்லிவிடும்.
பின்தங்கிய சூழலில் இருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவருக்குச் சிறப்பாகப் பாடம் நடத்தவும் வழிகாட்டவும் நல்ல பேராசிரியர் வாய்க்கவில்லை என்பதற்காக, அவர் பாதிக்கப்படக் கூடாது இல்லையா! அதனால், அறிவார்ந்த பேராசிரியர்களின் தொடர்பு, சிறந்த பாட விரிவுரைகளின் வீடியோக்கள் அவரைச் சென்றடைய இந்தத் தளம் உதவும். இதுதான் Upskilling எனப்படும் திறன் மேம்பாடு.
படித்த படிப்பைப் பணியிடத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்காக Rightskilling எனப்படும் ‘பணித் திறன் பயிற்றுவிப்பு’-ம் இங்கு அளிக்கப்படுகிறது. இவற்றைத் துறை சார்ந்த நிபுணர்கள் மூலமாக வழங்குகிறோம்.
திறன் மேம்பாடும் பணித் திறன் பயிற்றுவிப்பும் நமது கல்லூரிகளில் போதிய அளவுக்கு வழங்கப்படாததாலேதான் இன்று பலர் பட்டம் இருந்தும் வேலையின்றித் தவிக்கிறார்கள். இதைச் சீர்செய்யும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன்” என்கிறார் பிரவீன்.
தேடி வரும் வேலை
மாணவப் பருவத்தில் தனக்குப் பிடித்ததெல்லாம் தனக்குக் கைவரப்பெற்றதாகக் கற்பனை செய்துகொள்வது பலருடைய இயல்பு. அப்படி இருக்கும்போது உங்களுடைய விருப்பம், திறமை இரண்டையும் பிரித்துச் சொல்லிவிடுகிறது இந்தத் தளம். எதில் கூடுதல் பயிற்சி தேவை என அதற்கான வழிகாட்டுதலையும் சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம் வேலை எப்படிக் கிடைக்கும் என்று கேட்டால், “பணி நியமனத்தில் முன்னிலை வகிக்கும் சர்வதேச நிறுவனமான ‘மேன்பவர் குரூப்’ உடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுனத்தின் கீழ் 200 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. இதனால், எங்களுடைய தளத்தைப் பயன்படுத்தும் மாணவர் களின் திறனை அடையாளம் கண்டு, இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் வேலை அளிக்கின்றன.
கடந்த ஓராண்டில் இதன்மூலம் 3,500 மாணவர்களுக்குப் படித்து முடித்தவுடன் வேலை கிடைத்திருக்கிறது. 850 மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் கிடைத்திருக்கிறது. கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் இந்த இணையதளம் முற்றிலும் இலவசம். என்னுடைய நிறுவனத்துக்கான வருமானத்தைப் பணிநியமனம் செய்யும் நிறுவனங்களிடம் இருந்து ஈட்டுகிறேன்” என்கிறார்.
இதுபோக மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை, ஊக்கத் தொகை, பயிலரங்க விவரங்கள் உள் ளிட்ட பல்வேறு திட்டங்களையும் இந்தத் தளம் அவ்வப்போது அறிவிக்கிறது.
தீர்வு உண்டா?vetri-2jpgright
“கல்லூரி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகத் தோன்றும் இந்த இணையதளம் இன்றைய வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் உதவுமா?” என்று கேட்டால்,
“தாங்கள் படித்த துறையில் என்ன புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான், இன்றைய பட்டதாரி களின் மிகப் பெரிய பலவீனம். அதற்குக் காரணம் படிக்கும் காலத்தி லேயே பணி உலகத் தொடர்புகளை மாணவர்களுக்குக் கல்லூரிகள் ஏற்படுத்தித் தருவதில்லை. இதற்குத் தீர்வு காண்பதே எங்களுடைய முதன்மையான நோக்கம். எங்களுடைய தளம் வழங்கும் அத்தனை வசதிகளையும் பெறக் கல்லூரியில் படிப்பவர்களாக இருப்பது அவசியம்.
அதேநேரத்தில் மற்றவர்களும் இதில் உள்ள கட்டுரைகள், தகவல்கள், செய்திகளைப் பின்தொடர முடியும். எங்களுடைய இணையதளத்தில் உங்களுடைய பெயரையும் உங்களுடைய கல்லூரியின் பெயரையும் தொடர்பு எண்ணையும் பதிவிட்டால்போதும். எங்களுடைய குழு உங்களைத் தொடர்புகொள்ளும்” என்கிறார் பிரவீன்.
கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடத்துக்கும் பணிச் சந்தையில் தேவைப்படும் திறன்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது.
பணி உலகுக்குள் கால்பதிப்பதற்குத் தேவையானவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கல்வி நிறுவனங்கள் இன்றைய அதிவேக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக் கின்றன. இந்நிலையில் பாடத்திட்டத்துக்கும் பணிச்சந்தையின் தேவைக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டுநிரப்ப முயலும் பலர் இன்றைய தேவை. அதற்கு ‘லெட்ஸ்கனெக்ட்’ கைகொடுக்கிறது.
கல்லூரிகள், மாணவர்கள் இணைய: www.letzconnect.com
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago