சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா மற்றும் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற 72 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகள் வழங்கினார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இலக்கியம், வினாடி வினா, சிறார் திரைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வென்றவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலும் பங்கேற்றனர்.
இதில் பள்ளி அளவில் 7 லட்சத்து 55,939 மாணவர்களும், வட்டார அளவில் ஒரு லட்சத்து 51,699 மாணவர்களும், மாவட்ட அளவில் 7,576 மாணவர்களும், மாநில அளவில் 722 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டிகளில் 72 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தேர்வு செய்து தலா ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு ‘இளம் கவிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் இருந்து மாநில அளவில் மாணவர் நா.மோகன் (அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தேக்கம்பட்டி, தேனி), ரா.சண்முக ஷிவானி (அரசு மேல்நிலைப் பள்ளி, அரியக்குடி, சிவகங்கை) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
» ‘மம்மூட்டிக்காக பிரார்த்தனை செய்ததில் என்ன தவறு?’ - சர்ச்சைக்கு பதில் அளித்த மோகன்லால்
» பூந்தமல்லி | செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு
இவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதவிர மாநில அளவிலான மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 274 மாணவர்களுககு 3 நாட்கள் பயிற்சியானது சென்னையில் அளிக்கப்பட்டது. இந்த போட்டிகள் மற்றும் சிறப்பு பயிற்சியை நடத்துவதற்கு ரூ.1.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 114 மாணவர்கள் மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவுக்காக ரூ.3 கோடி ஒதுக்கபபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
15 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago