சென்னை பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறுமதிப்பீட்டுக்கு மார்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம்!

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு வெளியிடப்படுகிறது. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு தகுதியுள்ள மாணவர்கள் மார்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வி.ஏழுமலை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இளங்கலை, முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். இணைப்புகள் > www.egovernance.unom.ac.in/results | www.exam.unom.ac.in/results

கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பின்பு இளங்கலை படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும், அதேபோல், 2023-2024-ம் கல்வி ஆண்டு மற்றும் அதன் பிறகு முதுகலை படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திக்கொள்ளலாம்.

அதேபோல், இளங்கலை பயிலும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300. இக்கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

கல்வி

15 days ago

மேலும்