சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
இதையடுத்து முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் https://upsc.gov.in/ எனும் வலைத்தளத்தில் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 12 முதல் 18-ம் தேதி வரை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
முக்கிய செய்திகள்
கல்வி
59 mins ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago