எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்! - 2025’ - கல்லூரி மாணவர்​களுக்கான மாநில அளவிலான பேச்சு போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்​ஆர்எம் தமிழ்ப்​பேராயம் சார்​பில் ‘சொல் தமிழா! சொல்!’ 2025 எனும் கல்லூரி மாணவர்​களுக்கான மாநில அளவிலான பேச்​சுப்​போட்டி நடைபெறுகிறது.

தமிழகமெங்​கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்​கழகங்​களில் பேச்​சுத் திறன்​மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கு​விக்​கும் நோக்​குடன் இந்தப் போட்டி நடைபெற​விருக்​கிறது. தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களும் 9 மண்டலங்​களாகப் பிரிக்​கப்​பட்டுப் போட்​டிகள் நடைபெறவுள்ளன.

அதன் விவரம் வருமாறு: சென்னை மண்டலப் போட்​டிகள்- ஜனவரி 26, வேலூர் மண்டலப் போட்​டிகள்- பிப்​ரவரி 2, கடலூர்- பிப்​ரவரி 9, திருச்சி- பிப்​ரவரி 16, தஞ்சாவூர்- பிப்​ரவரி 23, மதுரை- மார்ச் 2, நெல்லை- மார்ச் 9, கோவை- மார்ச் 16, சேலம்- மார்ச் 23 ஆகிய தேதி​களில் நடைபெற உள்ளன. இப்போட்​டிகளில் 18 முதல் 25 வயது வரையிலான இளங்கலை முதலா​மாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை (கல்​லூரி, பல்கலைக்​கழகத்​தில் பயில்​வோர் மட்டும்) பங்கேற்​கலாம்.

மாநில அளவிலான போட்டி ஏப்.6-ம் தேதி முற்​பகலிலும், அன்று மாலையே பரிசளிப்பு விழா​வும் நடைபெறும். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ.1 லட்ச​மும், இரண்​டாம் பரிசாக ரூ.75 ஆயிர​மும், மூன்​றாம் பரிசாக ரூ.50 ஆயிர​மும், ஆறுதல் பரிசாக 5 நபர்​களுக்கு தலா ரூ.20 ஆயிர​மும் வழங்​கப்​படும். மாநில அளவில் முதல் பரிசாக ரூ.5 லட்ச​மும், இரண்​டாம் பரிசாக ரூ.3 லட்ச​மும், மூன்​றாம் பரிசாக ரூ.2 லட்ச​மும் வழங்​கப்​படும். இப்போட்​டி​யின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்​கப்​பட​வுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

இந்தப் போட்​டி​யின் பிரிண்ட் மீடியா பார்ட்​னராக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், மீடியா பார்ட்​னராக புதிய தலைமுறை, வேந்​தர், புது​யுகம் தொலைக்​காட்​சிகளும் இணைந்​துள்ளன. இப்போட்​டி​யில் பங்கேற்க விரும்​புபவர்கள் இந்த லிங்​கில் https://forms.gle/jQPWBToWbzzsbVvz8 பதிவுசெய்து கொள்ள வேண்​டும். கூடுதல் விவரங்​களுக்கு 044- 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்​களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்​சல் ​முகவரி​யில் தொடர்பு ​கொள்​ளலாம்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

10 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்