திறன் சார்ந்த குறுகியகால பயிற்சி படிப்புகள்: யுஜிசி வரைவு அறிக்கை வெளியீடு

By சி.பிரதாப்

சென்னை: எதிர்கால தேவைக்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களில் திறன் சார்ந்த குறுகியகால பயிற்சி படிப்புகளை அறிமுகப்படுவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தற்போதைய காலச்சூழலுக்கேற்ப தொழில் வளர்ச்சி, சுய மேம்பாடு, பணி நுணுக்கங்களை நுட்பமாக அறிந்து கொள்வதற்காக திறன்சார்ந்த குறுகிய கால பயிற்சி படிப்புகள் உதவுகின்றன. இந்த படிப்புகளை பயிலும்போது ஒருவரது உற்பத்தி திறன் மேம்படும். அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியும் முன்னேறும்.

இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்துக்கு இணையான அம்சங்களை இந்த திறன் சார்ந்த பயிற்சி படிப்புகள் கொண்டுள்ளன. அதை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அறிமுகப்படுத்தவும், அதற்கான நிலையான செயல் திட்டங்களை வகுப்பதற்குமான வழிகாட்டு நெறிமுறைகளின் வரைவு அறிக்கை யுஜிசி வலைத்தளத்தில் (https://www.ugc.gov.in/) தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த கருத்துகள், பரிந்துரைகளை ஜனவரி 30-ம் தேதிக்குள் அனுப்பலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 hours ago

கல்வி

13 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

மேலும்