மதுரை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிப்பதா, இல்லை பயிற்சி கையேடுகளை படிப்பதா என குழப்பத்தில் உள்ளனர். அதேபோல் ஆசிரியர்களும் எதை கற்பிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் அடிப்படை கணிதம், மற்றும் எழுத்துகளை பிழையின்றி எழுதி, படிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் வழங்கப் பட்டன. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டு வரை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்துக்கும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் பாடப் புத்தகங்களை படிப்பதா, பயிற்சி கையேடுகளை படிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஆசிரியர்களுக்கும் பாடப் புத்தகங்களை கற்பிப்பதா, பயிற்சிக் கையேடுகளை கற்பிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
» பின்வாங்கிய ‘விடாமுயற்சி’யால் பொங்கலுக்கு அணிவகுக்கும் படங்கள்!
» தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், வழக்கம்போல் பாடப்புத்தகங்களை கற்பித்துள் ளோம். கரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி கையேடுகளையும் கற்பித்துள்ளோம். இதனால் மாணவர்கள் குழப்பமடைகின்றனர்.
ஆனால் நடந்து முடிந்துள்ள அரையாண்டுத் தேர்வில் எண்ணும் எழுத்தும் திட்ட கையேடுகளில் இருந்து பெரும்பான்மையான கேள்விகள் (90 சதவீதம்) வந்துள்ளன. இதனால் பாடப் புத்தகங்களை படித்த மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களோடு, பயிற்சி கையேடுகளையும் கற்பிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வகுப்பு நேரங்களில் இதையும் நடத்த வேண்டும். நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வுகளில் 90 சதவீத கேள்விகள் பயிற்சி கையேடுகளிலிருந்து வந்துள்ளன. இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களை படிப்பதா, பயிற்சி கையேடுகளை படிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே பள்ளிக் கல்வித்துறை தெளிவான உத்தரவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
49 mins ago
கல்வி
3 hours ago
கல்வி
13 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago