பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை ரத்து செய்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
முன்னதாக கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ல் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர்வார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஒரு மாணவர், தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றக்கூடாது என்றும் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த புதிய கல்வி விதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஏற்கெனவே 16 மாநில அரசுகள், டெல்லி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தி வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹரியானா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச அரசுகள் இதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
8 hours ago
கல்வி
6 hours ago
கல்வி
9 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago