ஆசிரியருக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தள்ளிவைப்பு: 3 மாவட்டங்களில் ஜனவரி 21-ல் தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடலூர் உட்பட 3 மாவட்டங்களில் நடைபெறவிருந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் பருவத் தேர்வு ஜனவரி 6 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. எனவே, இந்த 3 மாவட்டங்களில் மட்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். அதன்படி 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 21, 22-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்புக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளிலும் பயிற்சிகள் நடைபெற வேண்டும். எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

கல்வி

14 days ago

மேலும்