சென்னை: ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் கல்லூரி மாணவிகள் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த வீரயுக நாயகன் ‘வேள்பாரி’ நாடகம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ் சார்பில் பரத்வாஜ் ஸ்ரீநிவாஸன் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். இது வழக்கமான நாடகமாக இல்லாமல், ஓர் இனத்தின் அடையாளமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் காப்பாற்றப்பட வேண்டும், வணிகம் சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் செந்நாயின் குணாதிசயங்கள், ஒரு திசை நோக்கி தேவாங்கு தூங்குவது, குலங்கள் பற்றிய குறிப்புகள், தமிழர்களின் வீரம், நிலப்பரப்பின் தன்மைகள், ஒருகவிஞரின் உணர்வுகள், போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய கடமைகள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ஆய்ந்து, அவற்றை தொகுத்து நாடக வடிவில் எழுதி இயக்கியுள்ளார்ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் இராணி மனோகரன்.
ஒவ்வொரு காட்சிக்கும் அக்கல்லூரி மாணவிகள் உயிர்கொடுத்துள்ளனர். அழகாக தமிழ் பேசி, பல வருடங்கள் மேடை நாடக அனுபவம் வாய்ந்த நடிகர்களைப் போல் அனைவரும் மெச்சும்படியான நடிப்பில், ரசிகர்களின் உணர்வைத் தொட்டு, உள்ளத்தை உறைய வைத்துள்ளனர்.
வேள்பாரியும், கபிலரும் இந்நாடகத்துக்கு தூண்கள் போல் அமைந்துள்ள கதாபாத்திரங்கள். இருவரின் உரையாடலில் வெளிப்படும் சமதர்ம சிந்தனை கள், முருகன் - வள்ளி இருவருக்கும் இடையேயான காதல், அக்கால தமிழர்களின் வாழ்க்கை முறை, மூவேந்தர்களின் எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை.
» ‘படை தலைவன்’ படத்தில் ஏ.ஐ. மூலம் விஜயகாந்த்!
» ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
பச்சைப்பசேல் செடி கொடிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், ஓடை - மலை ஆகியவை எல்இடி திரையில் தோன்ற, மேடையில் நாகர் நடனம், கொற்றவை கூத்து ஆகியவற்றைக் காணும்போது வெள்ளித்திரையில் படம் ஓடும் பிரமையே ஏற்படுகிறது.
உதவி இயக்கம் - ஸ்ரீ வைஷ்ணவி, அமிர்தவர்ஷினி, காவியா, டைட்டில் டிசைன் உமா மகேஸ்வரி, பின்புல அரங்க நிர்மாணம், எல்இடி திரை - கலைமாமணி வி.ஒய்.தாஸ், ஜான்சன், ஒப்பனை அசோக், ஒளி மனோகரன், இசை வேடராஜன், பின்னணி இசை அலெக்ஸ், ஒருங்கிணைப்பாளர் கோ.பாட்டழகன், மேடை நிர்வாகம் ஆடுதுறை பாஸ்கர் ஆகியோரின் கூட்டணியில் நாடகம் மெருகேற்றப்பட்டுள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் கல்லூரி மாணவிகளே ஏற்று நடித்ததன் மூலம் நாடகத் துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றே கூறலாம்.
முக்கிய செய்திகள்
கல்வி
14 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago