சென்னை: 2025 ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருவதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது 2025 ஜனவரி பருவத்துக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இக்னோ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும். சேர்க்கை உறுதிசெய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in/) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை (www.ignou.ac.in) பார்க்கலாம். மேலும் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago