புதுடெல்லி: கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த 2011-12 கல்வியாண்டில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 16,410 ஆக இருந்தது. இது 2014-15-ல் 34,774 ஆகவும் 2016-17-ல் 47,575 ஆகவும், 2019-20-ல் 49,000 ஆகவும் அதிகரித்தது. ஆனால் 2020-ல் கரோனா பெருந்தொற்று பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது.
கரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்து இயல்புநிலை திரும்பியதையடுத்து, இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்க மீண்டும் அதிகரித்து வருகிறது. நடப்பு 2024-25 கல்வியாண்டில் 200 நாடுகளைச் சேர்ந்த 72,218 பேர் இந்திய கல்வி நிறுவனங்களில் பயின்று வருவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.
வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக உலகத் தரத்தில் கல்வியை வழங்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட யிஜிசி அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
» டிக்கெட்டுக்காக ஆண்டுக்கு ரூ.56,993 கோடி மானியம் வழங்குகிறது ரயில்வே துறை
» இந்தியாவில் iQOO 13 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
கல்வி
6 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago