சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில், சென்னை பல்கலைகழகத்தின் தொலைதூரக் கல்வி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, “சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுனத்தின் இளநிலைதேர்வுகள் டிசம்பர் 1ம் தேகி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கைக் காரணமாக அந்தத் தேர்வு தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வு டிசம்பர் 15ம் தேதி நடைபெறும்” என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
விமானநிலையம் மூடல்: முன்னதாக, புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இன்று இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை நிறுத்திவைப்பு: வங்கக்கடலில் உருவான புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே MRTS பிரிவில் புறநகர் சேவைகள் நண்பகல் 12.15 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமை சீரான பின்னர் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
» 6 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
» சிஐஎஸ்சிஇ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
மணிக்கு 65 - 73 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே MRTS பிரிவில் புறநகர் சேவைகள் நண்பகல் 12.15 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் உதவிகளுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அலுவலகம் (வணிகம்) - 044-25330952, 044-25330953, சென்னை சென்ட்ரல் - 044-25354140 & 22277, எழும்பூர் - 9003161811, தாம்பரம் - 8610459668, செங்கல்பட்டு - 9345962113, பெரம்பலூர் - 9345962147 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பு: சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வித தடை, தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலையப் படிகள், லிஃப்ட்களைப் பயன்படுத்தும்போது பயணிகள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உதவிக்கு 1860 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், பெண்களுக்கான ஹெல்ப்லைன் 155370 என்று அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago