சென்னை: மாதந்தோறும் ரூ.10 ஆயிரம், ஆராய்ச்சி நிதியுதவி பெற கல்லூரி ஆய்வு மாணவர்கள் நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் திங்கட்கிழமை (நவ.25) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அறிவியல் தொழில்நுட்ப மாநிலம் மன்றம் கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வுநிதியுதவி பற்றைக்குறையை களையும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், கல்லூரிகளில் படிக்கும் முழுநேர பிஎச்டி ஆய்வு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் ஆய்வு உதவித்தொகையும், இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
ஆய்வு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் குறைந்தபட்சம் 2 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 ஆய்வு மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி. கூடுதல் விவரங்களை www.tanscst.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
18 hours ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago