தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக 24-வது பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்​கழகத்​தின் 24-வது பட்டமளிப்பு விழா​வில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவி மாணவர்​களுக்கு பட்டங்களை வழங்​கினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்​கழகத்​தின் 24-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்​பேரி​யில் உள்ள கால்நடை மருத்​துவக் கல்லூரி​யில் நேற்று நடைபெற்​றது. பல்கலைக்​கழகத்​தின் வேந்​தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்​.ரவி தலைமை​யில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 588 பேருக்கு பட்டங்கள் வழங்​கப்​பட்டன. அதில் 437 பேருக்கு விழா மேடை​யில் நேரடியாக பட்டங்கள் வழங்​கப்​பட்​டன.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்​துக் கல்லூரி​யில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவி திலக ஈஸ்வரி ஆராய்ச்​சி​யில் சிறந்து விளங்​கியதற்​காக​வும், பட்டப் ​படிப்​பில் அதிக மதிப்​பெண் பெற்​றதற்​காக​வும் மொத்தம் 14 பதக்​கங்​களை​யும், விருதுகளை​யும் பெற்​றார். அந்த மாணவியை ஆளுநர் ஆர்.என்​.ரவி கவுர​வித்​தார்.

ஆண்டறிக்கையை வெளி​யிட்டு பல்கலைக்​ககழக துணைவேந்தர் மருத்​துவர் செல்​வகு​மார் பேசுகை​யில், “தமிழ்​நாடு கால்நடை மருத்​துவப் பல்கலைக்​கழகம் 647 பேராசிரியர்​கள், 915 நிர்​வாகப் பணியாளர்​கள், 2,978 மாணவர்​களைக் கொண்ட முதன்​மையான கல்வி நிறு​வனமாக திகழ்ந்து வருகிறது. கல்வியை வழங்​கு​வதோடு மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி நடவடிக்கைகளும் திறம்பட மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. ஆசில் இனக் கோழிகள், தோடா எருமை இனம், சாந்​திநல்லா ஆடு இனங்களை பாது​காப்​ப​தற்கான ஆராய்ச்​சிகளை மேற்​கொண்டு, அதற்காக தேசிய அளவிலான சிறப்பு விருதுகளை பல்கலைக்​கழகம் பெற்றுள்ளது.

தற்போது பல்கலைக்​கழகத்​தில் ரூ.218.05 கோடி மதிப்​பிலான 195 ஆராய்ச்சி திட்​டங்கள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. விவசா​யிகளை பாது​காக்​க​வும், இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​க​வும், மரபியல் வளங்களை பாது​காக்​க​வும் இந்த ஆராய்ச்சி திட்​டங்கள் செயல்​படுத்​தப்​படு​கிறது.

கால்நடை உற்பத்​தியை மேம்​படுத்​துதல், நோயறிதல் தொழில்​நுட்​பம், விலங்​கு​களி​லிருந்து மனிதர்​களுக்கு பரவும் நோய்​களுக்கு தீர்வு காணுதல் போன்ற​வைகள் தொடர்பாக மட்டும் 89 ஆராய்ச்​சிகள் நடைபெறுகிறது” என்றார்.

சிறப்பு விருந்​தினர் அறிவுரை: சிறப்பு விருந்​தினராக பங்கேற்ற பெங்​களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத் தலைவர் மருத்​துவர் வி.ராம் பிரசாத் மனோகர் பேசுகை​யில், “கால்நடை மருத்​துவப் பல்கலைக்​கழகத்​தின் முன்​னாள் மாணவர் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. கால்நடை மருத்​துவப் படிப்பை படிக்​கும் போது நான் சராசரி மாணவனாகவே இருந்​தேன். பின்னர், மத்திய அரசின் இளம் விஞ்​ஞானி ஊக்கத்​தொகை திட்​டத்​துக்கு ஆய்வுகளை சமர்ப்​பித்து தொடர் தோல்விகளை எதிர்​கொண்​டேன். ஆனாலும், விடா​முயற்​சி​யால் ஊக்கத்தை கைவிடாமல் ஐஏஎஸ் தேர்வை 7 ஆண்டுகள் போராடி வென்​றேன். அரசுப் பள்ளி​யில் படித்து ஐஏஎஸ் ஆக முடி​யும் என்ப​தற்கு நான் உதாரணம்.

இப்போது பட்டம் பெற்றுள்ள இளைஞர்​களை, உலக வாழ்க்கை வரவேற்க காத்​திருக்​கிறது. நம்மை சுற்றி பல நெருக்​கடியான சூழல் ஏற்படும். அப்போது மாணவர்கள் தைரியான முடிவுகளை எடுக்க வேண்​டும். வாழ்க்கை​யில் வெற்றி பெற வேண்​டும் என்றால் தைரியமான முடிவுகள் மிக அவசியம் ஆகும். மதிப்​பெண்கள் வெறும் எண்கள் மட்டும் தான். உங்கள் திறமைகளை மட்டுமே நீங்கள் நம்ப வேண்​டும்” என்றார்.

அமைச்சர் புறக்​கணிப்பு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்​பிதழில், பல்கலைக்​கழகத்தின் இணைவேந்​தரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்​சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்​கிறார் என்று குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. ஆனால், அமைச்சர் பட்டமளிப்பு விழா​வில் பங்கேற்​க​வில்லை. சமீபத்​தில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பங்​கேற்ற நிகழ்ச்சி ஒன்​றில், தமிழ்த் ​தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்​பட்ட ​விவ​காரத்​துக்கு பின்னர், ஆளுநர் பங்​கேற்​கும் நிகழ்ச்​சிகளை அமைச்​சர்​கள் தொடர்ந்து புறக்​கணித்து வரு​கின்​றனர் என்​பது குறிப்பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

2 hours ago

கல்வி

14 hours ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

மேலும்