சென்னை: அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது: நாங்கள் கடந்த 15 ஆண்டு காலமாக அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம். தகுதிவாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை பணிவரன்முறை செய்து பணிநிரந்தரம் செய்துதர தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் அரசு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளதாக அறிகிறோம். சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு முன்பு வயது வரம்பு 57 ஆக இருந்து வந்த நிலையில் அது கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம்40 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
வயது வரம்பு 40 ஆக இருப்பதால் பல ஆண்டுகள் பணி அனுபவம் வாய்ந்த எங்களைப் போன்றோரால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. இதனால், ஏராளமான கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுவர். அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பும் முன்புகுறைக்கப்பட்டபோது அரசுக்கு விடுக்கப்பட்ட தொடர் வேண்டுகோளின்பேரில் அது முன்பு இருந்து வந்ததைப் போல் 57 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான வயது வரம்பையும் உயர்த்த வேண்டும். இதனால், சட்டக் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
3 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago