சென்னை: முதல்கட்டமாக 260 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக தொழில் முனைவோருக்கான கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தங்களது புதியகண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர்தா.மோ. அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங் கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக தொழில் முனைவோருக்கு கல்லூரிஉருவாக்கப்பட உள்ளது. 260 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், ரூ.1.72 கோடியில் இந்த ஆண்டு முதல் அக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. அதற்குஇணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரவேற்பை பொருத்து, தமிழகம் முழுக்க இளைஞர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
» ரூ.250 கோடியை தாண்டும் அமரன்: டாப் ஹீரோ வரிசையில் சிவகார்த்திகேயன்
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.1,256 கோடி மானியம் தந்து, ரூ.3,768 கோடி வங்கிகடன் பெற்றுத் தந்து 40,590 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் 51,000 பேரை மட்டுமே தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனஇயக்குநர் அம்பலவாணன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
7 hours ago
கல்வி
8 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago