கல்வியை ஒருபோதும் வணிகமாக பார்க்கக் கூடாது: குடியரசு துணைத் தலைவர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கல்வியின் நோக்கம் சமூகத்துக்கான சேவையாகும் என தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், கல்வியை ஒருபோதும் வணிகமாகப் பார்க்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "கல்வியின் நோக்கம் சமூகத்துக்கான சேவையாகும். கல்வியை ஒருபோதும் வணிகமாகப் பார்க்கக் கூடாது. சமுதாயத்திற்கு பங்களிப்பதற்கான ஒரு தெய்வீக அழைப்பு கல்வி.

கல்வி, மனித வளத்தை வளப்படுத்துகிறது. நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறது. நமது வளமான, பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை மீண்டும் கண்டறிய கல்வி நமக்கு அதிகாரம் அளிக்கிறது. சேவை மற்றும் வளர்ச்சிக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பாக கல்வியை பார்க்க இந்த நாள் உங்களை ஊக்குவிக்கட்டும். தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்துக்கு முன்னாள் மாணவர்கள் பல வழிகளில் உயிர்நாடியாக உள்ளனர். அதன் தூதுவர்களாக பணியாற்றுகிறார்கள். உலக அளவிலும், தேசிய அளவிலும், கல்வி நிறுவனத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான மிகவும் அர்த்தமுள்ள வழி, அதன் முன்னாள் மாணவர் அமைப்பில் தீவிரமாகப் பங்கேற்பதே.

வழக்கமான வருடாந்திர பங்களிப்புகளுடன் பழைய மாணவர் நிதியத்தை நிறுவ வேண்டும். உலகின் சில முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய முன்னாள் மாணவர்களின் நீடித்த ஆதரவு மற்றும் உற்சாகத்தால் செழித்து வளர்கின்றன. புகழ்பெற்ற நிறுவனங்களின் கதவுகள் வழியாக நுழையும் வருங்கால சந்ததியினரை உயர்த்துவதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பழைய மாணவர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவதும், இணைப்பதும் முக்கியம்.

உங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எந்த குடும்பப் பின்னணியும் இல்லாமல், கல்வியை மட்டுமே தங்கள் திறமையாகக் கொண்டு தொழில்துறையில் புதிய மைல்கற்களை உருவாக்கியுள்ளனர். எனவே, வேலைகளை உருவாக்குபவர்களாகவும், வேலைகளை கொடுப்பவர்களாகவும் பட்டம் பெறும் மாணவர்கள் திகழ வேண்டும். மிகப் பழமையான, மிகப்பெரிய, துடிப்புடன் செயல்படக்கூடிய ஜனநாயக நாடான இந்தியா, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும். இது நம் கனவாக இருக்க முடியாது. அது மீட்டெடுக்கப்பட்ட கனவாக இருக்க வேண்டும். மீட்டெடுக்கப்பட்டு நிலையாக இருப்பதாக இருக்க வேண்டும். சக்திவாய்ந்த இந்தியா, உலகளாவிய நல்லிணக்கம், அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான உத்தரவாதமாக இருக்கும். கட்சி நலன்களை விட தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

"கல்வி சிறந்த நண்பர், படித்தவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார்." என்கிறார் சாணக்யா. மேலோட்டமாகப் பார்த்தால், இவை எளிமையான வார்த்தைகள். ஆனால் ஒரு படித்த நபர் தனது தோள்களில் சுமக்கும் கடமைகளையே அவை பிரதிபலிக்கின்றன" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

9 hours ago

கல்வி

14 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

மேலும்