சாத்தூர்: அரசுப் பள்ளி மாணவிகள் இருவர் சிலப்பதிகாரத்தை நேற்று முழுமையாக முற்றோதல் செய்தனர். இந்த சாதனை நிகழ்வு `ஆல் இந்தியா ஃபுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி வீரச்செல்வி, 10-ம் வகுப்பு பயிலும் மாணவி வேணி ஆகியோர் சிலப்பதிகாரத்தை முழுமையாக முற்றோதல் செய்யும் நிகழ்ச்சி, ஸ்ரீ எஸ்ஆர்என்.ஞாபகார்த்த கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கிவைத்தார். மாணவிகள் இருவரும் சிலப்பதிகாரத்தில் உள்ள 3 காண்டங்கள், 30 காதைகளையும் இடைவிடாது 3 மணி நேரம் ஒப்புவித்து சாதனை படைத்தனர். இந்த சாதனை `ஆல் இந்தியா ஃபுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, முற்றோதல் செய்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டிப் பரிசளித்தனர்.
சிலப்பதிகாரத்தை முழுமையாக முற்றோதல் செய்து `ஆல் இந்தியா ஃபுக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்த சாத்தூர் அரசுப் பள்ளி மாணவிகளைப் பாராட்டிய விருதுநகர் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்.
முக்கிய செய்திகள்
கல்வி
4 hours ago
கல்வி
7 hours ago
கல்வி
8 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
23 hours ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago