குரூப்-4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் அக்.28-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது, மதிப்பெண், தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை நவ.9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவு (ஒடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

மேலும்