சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (சென்னை ஐஐடி) ஆராய்ச்சியாளர்களும், டெல்லியில் உள்ள சட்டக் கொள்கைக்கான விதி மையமும் இணைந்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் பங்கேற்பு அணுகுமுறைக்கான அடிப்படைக் காரணங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வழிமுறையின் விளைவுகளை மேம்படுத்துவதுடன், செயல்முறையில் நேர்மையையும் ஏற்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பல்துறை ஒத்துழைப்புடன் கூடிய அன்றாடப் பயன்பாட்டு அம்சங்களுடன் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு களங்கள் தானியங்கி முறையில் இயங்குவதால், அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை வெவ்வேறு விதமாக மாற்றிவிட முடியும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வடிவமைப்பு, செயல்படுத்துதல், மேற்பார்வை ஆகியவற்றை உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈடுபடுத்துவதன் அவசியத்தை இந்த மாதிரி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
சென்னை ஐஐடி-ல் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் கீழ் இயங்கிவரும் பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தின் (CeRAI) ஆராய்ச்சியாளர்களும், சட்டம் மற்றும் தொழில்நுட்ப சிந்தனையாளர் குழுவினரான விதி லீகல் (Vidhi Legal) அமைப்பினரும் தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், கொள்கை ஆராய்ச்சியாளர்களிடம் இரு பகுதிகளாக இந்த ஆய்வை நடத்தினர்.
» கல்விச் செல்வம் அருளும் அன்னை சாரதாம்பாள்
» ‘திறம்பட பணியாற்றியவர்’: முன்னாள் எம்.பி மலைச்சாமி மரணத்துக்கு இபிஎஸ் இரங்கல்
அவர்களின் கண்டுபிடிப்புகள் இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் ஏறத்தாழ 2.4 மில்லியன் அறிவார்ந்த கட்டுரைகளைக் கொண்ட திறந்த அணுகல் காப்பகமான ‘arXiv’-ல் ‘ப்ரீபிரிண்ட் பேப்பர்’ வடிவில் பிரசுரிக்கப்பட்டது.
இத்தகைய ஆய்வுகளின் அவசியத்தை எடுத்துரைத்த வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் (WSAI) தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன் கூறுகையில், “பொது மற்றும் தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை பரவலாக குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், புதிய மற்றும் எதிர்பாராத வழிகளில் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, வரிசைப்படுத்துதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்வது அவசியமாகிறது.
இந்த அமைப்புகளை வரிசைப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாவோர் எந்த அளவுக்கு வளர்ச்சியடைகிறார்கள் என்பது குறித்து எந்த கருத்தும் இல்லை என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனை ஒரு பெரிய இடைவெளியாகப் பார்க்கும்போது, அதிக பொறுப்புள்ள, பாதுகாப்பான, மனிதர்களை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் பங்கேற்பு அணுகுமுறை நன்மையளிக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.
சென்னை ஐஐடி-ன் பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு மையம் தலைவரான பேராசிரியர் ரவீந்திரன் மேலும் கூறும்போது, “இந்த ஆய்வுக் கட்டுரையின் பரிந்துரைகள் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் உள்ள பல்வேறு அழுத்தமான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் முக்கியமானவை. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த பிரிவினர் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் குறிப்பாக பன்னெடுங்காலமாக குறைந்த பிரதிநிதித்துவம் உள்ளவர் அனைவருக்கும் சிறப்பான சேவை கிடைக்கக் கூடிய அமைப்புகளை உருவாக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் வெளிப்பைடத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பது பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்க்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் பரவலாக அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் பணியை எளிதாக்குகிறது. அதுமட்டுமின்றி பரந்த அளவில் சம்பந்தப்பட்ட நபர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சார்புடைமை, தனியுரிமை மீறல்கள், விளக்கமின்மை போன்ற அபாயங்களைக் குறைக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுகிறது” எனத் தெரிவித்தார்.
சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் சட்டம் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் ஷெஹ்னாஸ் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறைகளின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்த தெளிவான கட்டமைப்பின் பற்றாக்குறை அவற்றை ஏற்றுக் கொள்ளுவதைக் கட்டுப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட நபர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, செயற்கை நுண்ணறிவு வாழ்க்கை சுழற்சி முழுவதும் அவர்களை ஈடுபடுத்துவது மற்றும் அவர்களின் கருத்துகளை திறம்பட ஒருங்கிணைப்பது போன்ற கட்டமைப்பை அளிப்பதன் மூலம் இந்த ஆய்வறிக்கை முக்கிய சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது.
முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலப் பராமரிப்பு போன்ற துறைகளில் பங்கேற்பு அணுகுமுறை வாயிலாக எவ்வாறு செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை மேம்படுத்த முடியும் என்பதையும் ஆய்வின் கண்டுபிடிப்புகள் நிரூபிக்கின்றன. பங்கேற்பு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவை உண்மையிலேயே மனிதர்களை மையமாகக் கொண்டதாக மாற்ற இயலும். இதுதான் IndiaAI இலக்கை அடைவதற்கான வழிமுறையாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
2 hours ago
கல்வி
18 hours ago
கல்வி
22 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago