சென்னை: பிஎட் சிறப்பு கல்வி படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செந்தில்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பிஎட் (சிறப்பு கல்வி) படிப்பை வழங்கி வருகிறது. மத்திய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் இப்படிப்பு, பிஎட் (பொது) படிப்புக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
2025ம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnou.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு முடிவு மற்றும் கட் ஆப் மதிப்பெண் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago