டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதியுடைய தொழில்நுட்ப பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்

By செய்திப்பிரிவு

சென்னை: டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதியுடைய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி) தேர்வு நவ.9, 11, 12, 16 ஆகிய தேதிகளில் ஓஎம்ஆர் ஷீட் மற்றும் கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

கல்வி

13 days ago

மேலும்