ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது: நவ.22-ம் தேதி வரை அவகாசம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வில் பங்கேற்க இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். முதன்மை தேர்வு (மெயின்ஸ்), பிரதான தேர்வு (அட்வான்ஸ்டு) என 2 பிரிவாக இது நடத்தப்படுகிறது.

இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்துகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும். பிப்ரவரி 12-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

11 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

மேலும்