அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2024 டிச.1-ம் தேதி நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் விவரங்களையும் மாவட்ட வாரியாக தயார் செய்ய வேண்டும். இதன் பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்களை நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது பின்வரும் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடத்தில் முதன்மை பாடமும், பிஎட் படிப்பும் படித்திருக்க வேண்டும். வெளிமாநிலச் சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2021 ஜன.1-ம் தேதிக்கு பிறகு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை ஆண்டுக்கு தற்காலிகமாக துறந்தவர்கள் மற்றும் ஏற்கெனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் பட்டியலில் இடம்பெறக்கூடாது. இளங்கலை பட்டத்தில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் ஒரே ஆண்டில் 2 பட்டங்கள் படித்தவர்களின் பெயரையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

மேலும்