கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: காமராஜர் துறைமுக நிறுவனம், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2024’ முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டியையும், ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியையும் நடத்துகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்.

‘வளமான தேசத்துக்கு நேர்மை எனும் கலாச்சாரம்’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2024’ அக்.28 முதல் நவ.3-ம் தேதிவரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான காமராஜர் துறைமுக நிறுவனமும், சென்னை துறைமுக ஆணையமும், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றன.

இந்த ஆண்டும் ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன. இந்த விநாடி-வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், ‘வளமான தேசத்துக்கு நேர்மை எனும் கலாச்சாரம்’ எனும் தலைப்பில் தமிழில் கட்டுரையை எழுத வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய 8838567089 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/KPLQUIZ என்ற ஆன்லைன் லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, வரும் அக்.28-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதற்கட்ட விநாடி-வினா நிகழ்வு அக்.28-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/KPLQUIZ என்ற ஆன்லைன் லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, வரும் அக்.28-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதற்கட்ட விநாடி-வினா நிகழ்வு அக்.28-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

மேலும்