சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த 2 வாட்ஸ்அப் குழுக்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர், கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள 2 முதுநிலை விரிவுரையாளர்களை நியமித்து 2 வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களை இந்த குழுவில் இணைக்க வேண்டும்.
இந்த புதிய முயற்சி, ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணித்திறனை மேம்படுத்த வழிவகை செய்யும். இதில், ஆர்வம் இல்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆர்வம் காட்டாதவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அறிக்கையை துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
12 hours ago
கல்வி
12 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago