யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு: 1.70 லட்சம் பேர் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: யுஜிசியின் நெட் தேர்வு முடிகளை தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது. இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.

அதன்பின் யுஜிசி நெட் மறுதேர்வு ஆக.21முதல் செப்.4-ம் தேதி வரை கணினி வழியில்நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6 லட்சத்து 84,224 பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள்முகமை நேற்று வெளியிட்டது. இதில் மொத்தமாக 1,70,734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக பிஎச்டி படிக்க தகுதியுடையவர்கள் 1,12,070 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வு முடிவுகளை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவிமைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in எனும் வலை தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 hours ago

கல்வி

23 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்