4 சனிக்கிழமைகள் மட்டுமே! - பள்ளிக் கல்வித் துறையின் திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு

By சி.பிரதாப்

சென்னை: பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 8-ம் தேதி வெளியிட்டது. அதில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. மேலும் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 தினங்களாக குறைத்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்துவிட்டன. இதனுடன் பழைய நாட்காட்டியில் பள்ளி இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 25-ம் தேதியாக இருந்தது. அதை தற்போது ஏப்ரல் 30-ம்தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலைநாட்கள் 210 தினங்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித் துறை அறுவுறுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: இதற்கிடையே தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அக்டோபர் 14-ம் தேதி வெளியிட உள்ளதாக தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 hours ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

கல்வி

15 days ago

கல்வி

16 days ago

மேலும்